செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (20:05 IST)

அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவ செலவு ரூ.26.74 லட்சம்: அதிமுக ஏற்றது!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் சமீபத்தில் காலமானார் என்பது தெரிந்ததே
 
காலமான மதுசூதனன் அவர்களுக்கு அதிமுகவினர் மட்டுமின்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் முழு மருத்துவ செலவை அதிமுக ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது
 
மதுசூதனனுக்காக செலவு செய்யப்பட்ட 26 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை ஏற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்,