கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கலைஞரை நினைவைப் போற்றியும் அவரின் அரிய சாதனைகளை எடுத்துக் கூறியும் அவர் நினைவைப் போற்றுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் கலைஞரின் மகனுமான மு க ஸ்டாலின் அவரின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.