1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (04:03 IST)

நள்ளிரவில் மெரீனாவில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை! பரபரப்பு தகவல்

கடந்த சில மாதங்களாகவே மெரீனா கடற்கரையில் என்னென்னவோ நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், ஓபிஎஸ் அவர்களின் தியானம், அதன் பின்னர் தீபா உள்ளிட்ட பலரின் தியானம், நெடுவாசல் போராட்ட முயற்சி என அடுக்கிக்கொண்டே போகலாம்



 


இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலின் இரவில் மெரீனா கடற்கரைக்கு வந்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் அவர் நேற்று நள்ளிரவு தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று மெரீனாவுக்கு வந்து ஹாயாக காற்று வாங்கினார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் அதிமுகவில் நள்ளிரவில் அமைச்சர்களின் வீடுகளின் ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளுடன் மெரீனாவில் வெட்ட வெளியில் ஆலோசனை செய்தது தமிழக அரசியலில் மீண்டும் பிரேக்கிங் நியூஸ் டிரெண்ட் வந்துவிட்டதை அறிய முடிகிறது.