வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (12:24 IST)

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு ஏன்?

நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அந்த விழாவை புறக்கணித்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் சந்திக்கின்றார்

சமீபத்தில் தமிழக அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்திய நிலையில் மாநிலம் முழுவதும் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் திமுக ஒரு குழு அமைத்து, போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை சீரமைக்க ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனையின் முடிவில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைப்பது, நிர்வாகத்தை சீர்படுத்துவது, நிதி நிர்வாகம் குறித்து பல்வேறு திட்டங்கள் உள்ளன.

இந்த திட்டங்களுடன் கூடிய அறிக்கையை முதல்வரிடம் வழங்குவதற்காகவே முதல்வரை மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடந்து வரும் நிலையில் முதல்வர்-எதிர்க்கட்சி தலைவரின் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.