வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (13:49 IST)

மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.....

திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று திடீரெனெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


'

 
கடந்த சில நாட்களாக அவரது கண்ணில் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. அவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் புரை இருப்பதாக கூறியுள்ளனர். 
 
இந்நிலையில் இன்று சட்டபை நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.