1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 20 ஜூன் 2016 (14:30 IST)

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறியவர் தான் ஜெயலலிதா - மு.க.ஸ்டாலின் பதிலடி

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறியவர் ஜெயலலிதா - மு.க.ஸ்டாலின் பதிலடி

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இதில், அதிமுக எம்எல்ஏ  செம்மலை கருணாநிதி குறித்து கூறிய கருத்தால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
 
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் செம்மலை உண்மைக்கு மாறாக தகவல்களை தருகிறார். இலங்கையில் போர் நடைபெற்ற போது போரில் பொது மக்கள் உயிரிழப்பது இயல்புதான் என்றும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா என்று பதிலடி கொடுத்தார்.