செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (15:05 IST)

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோரக் காவல்படை சார்பில் புதுச்சேரி கடற்கரையில் கடலோர தூய்மைப் பணி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடியசைத்து தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்.
 
இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் இணைந்த கடற்கரை பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வீசிச் சென்ற குப்பைகளை துணை நிலை ஆளுநர் அகற்றினார்.