வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

இரட்டை இலைக்கு 3வது இடம்: லயோலா கல்லூரியின் அதிர்ச்சி கருத்துக்கணிப்பு

ஒவ்வொரு தேர்தலின்போது சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்துக்கணிப்பு எடுத்து வெளியிடுவது வழக்கம். இந்த கருத்துக்கணிப்பு பெரும்பாலும் திமுகவுக்கு ஆதரவாகவே இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து இந்த கல்லூரி எடுத்த கருத்துக்கணிப்பும் திமுகவுக்கு ஆதரவாகவே உள்ளது. திமுக  33% வாக்குகள் பெற்று ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றும் என்று இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது
 
ஆனால் இது பெரிய விஷயமில்லை. இந்த கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு அடுத்தபடியாக குக்கர் சின்னத்தில் நிற்கும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்றும் அவர்  28% வாக்குகளை பெறுவார் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் மதுசூதனன் 26% ஓட்டுக்கள் மட்டுமே வாங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம், முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்களின் தீவிர பிரச்சாரம் இருந்தும் 3வது இடம்தான் அதிமுகவுக்கு கிடைக்கும் என்று கூறும் இந்த கருத்துக்கணிப்பால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதனையடுத்து வழக்கம்போல் டெபாசிட் வாங்காத கட்சியின் பட்டியலில் சேரும் நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜகவுக்கு தலா 2.18% மற்றும் 1.23% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.