1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2024 (10:01 IST)

பரிட்சைக்கு ஒழுங்கா படிங்க.. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை: தமிழ்நாடு வெதர்மேன்

Rain
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருந்தாலும், சென்னைக்கு இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், எனவே பள்ளிக்கு விடுமுறை இல்லை என்பதால் பரீட்சைக்கு படிக்க வேண்டிய மாணவர்கள் கவனமாக படிக்கவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு  காரணமாக இன்று சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், நாளை ஒரு வேளை கனமழை பெய்யலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, மாணவர்கள் பள்ளி விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இல்லாமல் ஒழுங்காக பரீட்சைக்கு படிக்கவும் என்றும், அலுவலகம் செல்பவர்களும் அலுவலகத்திற்கு செல்ல தயாராகவும் என்றும் காமெடியாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார்.


Edited by Mahendran