வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளை ‘டானா’ புயல்..!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்த நிலையில், தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயலுக்கு டானா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியதை தொடர்ந்து, நாளை டானா புயலாக உருவாகி வடமேற்கு திசையில் நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வரும் 25ஆம் தேதி அதிகாலை, தீவிர புயலாக உருமாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கும் தமிழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அதே நேரத்தில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva