வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (14:03 IST)

இளம் பெண்ணின் திருமணத்தை நிறுத்திய முன்னாள் காதலன்: அதிமுக இளைஞரணி வட்ட செயலாளர் கைது..!

marriage
சென்னையில் இளம் பெண்ணின் திருமணத்தை நிறுத்திய முன்னாள் காதலன், அதிமுக இளைஞரணி வட்ட செயலாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேர்ந்த இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் உடன் தான் ஒன்றாக இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளை வீட்டாரிடம் காட்டி திருமணத்தை முன்னாள் காதலன் நிறுத்தி உள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில்
அப்பெண்ணின் முன்னாள் காதலன் முகமது யூனஸ்,  அதிமுக 53வது வட்ட இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஒரு சிறார் என மூவரை வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் பெண்ணின் திருமணத்தை நிறுத்திய காதலருக்கு வெறும் 18 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran