செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (16:34 IST)

படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ‘மேயாதமான்’ பட நடிகை ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

மேயாத மான் படத்தில் நடித்த நடிகை இந்துஜா கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் ‘மேயாதமான்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். படத்தில் அவரை விட இந்துஜாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. 
 
இந்தப் படத்தில் வைபவ் தங்கையாக இந்துஜா நடித்துள்ளார். அவரின் காதலியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 
 
இந்த படத்தில் இந்துஜா, இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், அடுத்த சில படங்களில் முதல் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
 
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை இந்துஜா, தற்போது பில்லாபாண்டி’ படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. 
 
இந்த படத்தில் இந்துஜா, இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், அடுத்த சில படங்களில் முதல் ஹீரோயினாக நடித்து வருகிறார். 
 
ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களுக்கு இவரது குடும்பப்பாங்கான முகம் தான் நன்றாக பதிந்திருந்தது.
 
 ஆனால், சமீபத்தில் நடிகை இந்துஜா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.