1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 13 ஜூன் 2016 (08:58 IST)

காதலுக்காக பெற்ற தந்தையையே படுகொலை செய்த மகள்

காதலுக்காக பெற்ற தந்தையையே படுகொலை செய்த மகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை பெற்ற மகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 

 
கோவை, சொக்கம்புதூரை சேர்ந்த விவசாயியான  நாகராஜ்(55)க்கு ருக்கு பிரமிளா (42) என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். தேவணாம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு வாரத்துக்கு ஒரு முறை நாகராஜ் சென்று வருவார்.
 
இந்த நிலையில், கடந்த மாதம் 23 ஆம் தேதி  அவரது தோட்டத்தில்த்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
போலீஸ் விசாரணையில், அவரது மகள் மகாலட்சுமியும், சதீஷ் என்பவரும் காதல் செய்ததும், இதற்கு அவரது தந்தை நாகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய மகள் மகாலட்சுமியே, தனது காதலன் சதீசுடன்   சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
 
இந்த கொலை வழக்கு தொடர்பாக சதீசின் மற்றும் மகாலட்சுமி, கமலக்கண்ணன்(19), கிருஷ்ணகுமார் (19), சசிக்குமார் (20), சந்தோஷ்குமார் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.