வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 22 ஜூன் 2016 (15:09 IST)

கூம்பு ஒலி ஒலிபெருக்கிக்கு தடை - வழிபாட்டு தலங்களுக்கு சிக்கல்

கூம்பு ஒலி ஒலிபெருக்கிக்கு தடை - வழிபாட்டு தலங்களுக்கு சிக்கல்

வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வழிபாட்டுத் தலங்களில், திருவிழா மற்றும் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இந்த செயல் சட்டத்தை மீறிய செயல் என்றும், இது போன்ற தவறு செய்யும் போது சட்டம் தன் கடைமையை செய்ய வேண்டும் என்று சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் எஸ்.குமாரவேலு என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, வழிபாட்டு தலங்களில் அதிக ஒலியை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட்டால், அவற்றை உடனே பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இதனால், வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை இனி வரும் காலத்தில் பயன்படுத்த முடியாது.