புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 மே 2020 (10:17 IST)

சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களின் நிலை என்ன??

சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பதன் முழு தொகுப்பு இதோ...
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 15க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 15க்கும் குறைவான பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், பாதிப்புகளே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் மே 3 ஆம் தேதியோடு முடிவதாக இருந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு, கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பதன் முழு தொகுப்பு இதோ.. 
 
எதர்க்கெல்லாம் தடை? 
விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மெட்ரோ, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை தொடரும்.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், மால்கள், விளையாட்டு மைதானங்கள், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், அரசியல், மத, சமூக நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கான தடைகளும் தொடரும்.
அத்தியாவசியமற்ற பயணங்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை கட்டாயம் தடை
 
சிவப்பு மண்டலங்களுக்கான தளர்வுகள் என்ன? 
டாக்ஸி, ஆட்டோ, பேருந்து, சலூன் கடைகள் உள்ளிட்டவைகளுக்கான தடைகள் தொடரும்.
கட்டுமானப் பணிகள், சிறு, குறு தொழில்கள், உணவு உற்பத்திதுறை, செங்கல் சூளைகள் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.
ஊரகப் பகுதிகளில் மால்கள் தவிர்த்த மற்ற அனைத்து விதமான கடைகளுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.
தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். 
அரசு அலுவலகங்களிலும் உயர் அதிகாரிகள் அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும்.
விவசாயம் சார்ந்த பணிகள் முழுவதும் அனுமதியளிக்கப்படுகிறது.
தகவல் தொடர்புதுறை, கால் சென்டர், தகவல் மையம், குளிர்பதன மையம், பொருள்களை சேகரித்துவைக்கும் தொழில்களுக்கு அனுமதி. 
 
ஆரஞ்சு மண்டலங்களுக்கான தளர்வுகள் என்ன? 
ஒரு பயணியுடன் மட்டுமே பயணிக்கும் வகையில் டாக்ஸி இயங்குவதற்கு அனுமதி. 
மாவட்டங்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் ஒருவர் பயணிக்க முடியும்.
நான்கு சக்கர வாகனங்களில் அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். 
இரு சக்கர வாகனத்தில் பின்னால் ஒருவரை அமரவைத்துக்கொள்ளலாம்.
 
பச்சை மண்டலங்களுக்கான தளர்வுகள் என்ன? 
பச்சை மண்டலங்களில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி.
எல்லா வகையான சரக்கு வாகனங்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.