4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

sexual harassment
Suresh| Last Updated: புதன், 7 அக்டோபர் 2015 (07:37 IST)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவரது 4 வயது மகளுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கும் நஷீர் என்ற 31 வயது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கடந்த 2014 ஏப்ரல் 24 ஆம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை நஷீர் தனது
கடைக்குள் கூட்டிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர், காவல்துறையினரிடம் புகார் கொடுத்னர். இந்த புகாரின்பேரில், நஷீரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் மீது குழந்தைகள் பாலியல் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மீனா சதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நஷீருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :