செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (00:18 IST)

மனவளர்ச்சி பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு இதுதான் தண்டனை

மனவளர்ச்சி பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு கடலுார் மகிளா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 

 
கடலுார் பீமாராவ் நகர், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் ராமன், [வயது 40]. கடந்தாண்டு ஜூன் 24ஆம் தேதி, தனது வீடு கட்டுமானப்பணியின்போது அந்த பகுதியில் உள்ள மனநிலை பாதித்த பெண்ணை பார்த்துள்ளார்.
 
அப்போது அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனிமையில் இருந்த, 16 வயதுள்ள மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இது தொடர்பாக கடலூர் பழைய டவுன் காவல்நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கை நடத்தி வந்தனர்.
 
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.