மத்திய அரசைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் போராட்டம் !
மத்திய அரசைக் கண்டித்து, எல்.ஐ.சி ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்கள் கூட இந்த பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்க விண்ணப்பிக்க முடியாது என ஏற்கனவே எல்ஐசி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்கள் போலவே பிரதமர் காப்பீட்டு திட்ட உறுப்பினர்களும் இந்த பங்குகளை சலுகை விலையில் வாங்க முடியாது என எல்ஐசி நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து, எல்.ஐ.சி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பங்குச் சந்தையில் எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசைக் கண்டித்து, எல்.ஐ.சி ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.