1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 13 ஜூன் 2016 (06:35 IST)

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீண்டும் நீதிமன்ற புறக்கணிப்பு

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீண்டும் நீதிமன்ற புறக்கணிப்பு

புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து 17ஆம் தேதி வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளனர்.
 

 
இது குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகி பரமசிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கறிஞர்களின் நியாமயான கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் செவி சாய்க்க வேண்டும். ஆனால், எங்களை நசுக்க சென்னை உயர்நீதிமன்றம் புதிய சட்டவிதிகளை கொண்டு வந்துள்ளது.
 
இந்த விதிகளை வாபஸ் பெற வேண்டும் என்று 17ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.