செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (22:30 IST)

அவரவர் பிரச்சனையை அவரவர்தான் பேச வேண்டும்: 'மீடூ' குறித்து லதா ரஜினிகாந்த்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குறிப்பிட்ட மீடூ பாலியல் பிரச்சனை உள்பட பல பெண்கள் அடுத்தடுத்து கூறிய மீடூ குற்றச்சாட்டுக்கு பொதுமக்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது. இந்த பிரச்சனை குறித்து கருத்து சொல்லாத தலைவர்களோ அல்லது பிரபலங்களோ இல்லை எனலாம்

இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த லதா ரஜினிகாந்த் அவர்களிடம் மீடூ பிரச்சனை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய லதா ரஜினிகாந்த், 'ஒருசிலர் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்கள் அவரவர் பிரச்சனையை அவரவர்தான் தான் பேச வேண்டும். அதுகுறித்து நான் கருத்து கூறினால் நன்றாக இருக்காது என்று கூறியுள்ளார்.

மீடூ பிரச்சனை குறித்து ரஜினியே கருத்து கூறியுள்ள நிலையில் லதா ரஜினிகாந்த் இதுகுறித்து எதுவும் பேசாமல் நழுவியது பத்திரிகையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது