ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (13:36 IST)

சென்னையின் 16 சட்டமன்ற தொகுதியில் மகளிர் மட்டும் வாக்குச்சாவடி.. அனைத்தும் பிங்க் நிறம் தான்..!

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்குச்சாவடி மையம் சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒன்று  அமைக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் மட்டும் இருக்கும் இந்த பிங்க் வாக்குச்சாவடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிங்க் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அனைவரும் பிங்க் வண்ண உடைகளை அணிந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், முதியோருக்கு என தனித்தனி வரிசை அமைக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
 
இந்த பிங்க் நிற மகளிர் மட்டும் வாக்சாவடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் இன்னும் அதிகளவில் பிங்க் நிற வாக்கு சாவடிகள் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
 
Edited by Mahendran