1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 6 மே 2024 (13:22 IST)

கூலிப்படையினரால் தான் ஜெயக்குமார் கொல்லப்பட்டிருப்பார்: கே.எஸ்.அழகிரி அதிர்ச்சி தகவல்..!

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கூலிப்படையினரால் தான் கொலை செய்யப்பட்டு இருப்பார் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் திடீரென கடந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது மரணம் குறித்து மர்மம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கூறி வருகின்றனர். மேலும் அவர் எழுதியதாக கூறிய இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதை அடுத்து அந்த கடிதங்கள் உண்மையானதானா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோர்கள் மீது ஜெயக்குமார் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டிய இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த மரணம் குறித்து விசாரணை செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கூலிப்படையினரால்தான் கொல்லப்பட்டு இருப்பார் என்றும் ஜெயக்குமார் மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Siva