வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (19:21 IST)

கமல் எங்களோடு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்: பிரபல அரசியல் கட்சி தலைவர்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் எந்த பெரிய கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் கிட்டத்தட்ட தனித்து போட்டியிட்டு சுமார் 4 சதவிகித ஓட்டுக்களை பெற்றுள்ளார். இருப்பினும் இவரது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
 
திமுக, அதிமுக இல்லாத ஒரு புதிய கூட்டணியை க்மல் உருவாக்கியிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தேர்தலுக்கு முன்னரே கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில் கமல்ஹாசனும் டெல்லி சென்று ராகுல்காந்தி, சோனியா காந்தியை சந்தித்து கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்டார். ஆனால் திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்ததால் கமல்ஹாசனால் புதிய கூட்டணியை உருவாக்க முடியாமல் போய்விட்டது.
 
இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து கருத்து கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, 'கமல்ஹாசனும், சீமானும் வெற்றி பெறுவதற்கான இலக்கை அடையவில்லை என்றும், கமல் எங்களோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னோம் என்றும், தனித்து நின்று அவர் மகத்தான வாக்குகளை பெறவில்லை என்றும் கூறியுள்ளார். 
 
கமல் கட்சி, காங்கிரஸ், தினகரன், கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, போன்ற திமுக, அதிமுக, பாஜக இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்திருந்தால் தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.