வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மே 2021 (12:54 IST)

சீமானுக்கு பின்னால் இருக்க ரகசியம் விரைவில் வெளிவரும்! – காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி அறிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தில் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தனிப்பெரும்பான்மை வாக்குகள் பெற்று திமுக ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் திமுக கூட்டணியும், இரண்டாவதாக அதிமுக கூட்டணியும் இடம்பெற்ற நிலையில், இவைதவிர்த்து பல தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்ற பட்டியலில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்று 75 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ள காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியா? ஒரு தொகுதிக்கு சராசரியாக 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்ற நாதக பெரிய கட்சியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “தகவல்களின் அடிப்படையில் நாதக மூன்றாவது பெரிய கட்சி என ஒருசில ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியை பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு பின்னால் உள்ள மர்ம ரகசியங்களை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொண்டு தெளிவு பெறுவார்கள்” என கூறியுள்ளார்.