வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2023 (09:43 IST)

இந்த தடவை கோவா போயே தீருவேன்! வீடுகளில் இளைஞர் கைவரிசை! – கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

theft
கோவா சுற்றுலா செல்வதற்காக பல்வேறு வீடுகளில் திருடிய இளைஞரை போலீஸார் கோவாவிற்கே சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2கே கிட்ஸின் கனவு சுற்றுலா தளமாக லடாக் இருப்பது போல, 90ஸ் கிட்ஸின் கனவு சுற்றுலா தளமாக இருந்து வருவது கோவா. கோவா செல்ல வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் திட்டம் போடுவதும், இயலாமல் போவதும் பலருக்கு வாடிக்கையாக உள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த 25 வயதான சதீஷ்குமார் என்பவருக்கும் கோவா சுற்றுலா செல்ல நீண்ட காலமாக ஆசைப்பட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு பண வசதி இல்லாததால் வீடுகளில் திருட முடிவெடுத்துள்ளார்.

அதன்படி அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து சுமார் 80 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிய அவர் அந்த பணத்தை கொண்டு கோவாவிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் சதீஷ்குமாரை கைது செய்ய கோவா விரைந்தனர்.

கோவாவிற்கே சென்று சதீஷ்குமாரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடம் மீதமிருந்த நகை, பணத்தை மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவா சுற்றுலாவுக்காக இளைஞர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K