தீபாவளிப் பண்டிகை : போக்குவரத்து நெரிசலில் கோயம்பேடு

தீபாவளிப் பண்டிகை : போக்குவரத்து நெரிசலில் கோயம்பேடு


Murugan| Last Modified வியாழன், 27 அக்டோபர் 2016 (18:36 IST)
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து ஏராளமானோர் வெளியூருக்கு செல்வதால், கோயம்பேடு பேருந்து நிலையம், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.

 

 
தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 11,225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பலர் தங்கள் ஊருக்கு செல்வதற்கு, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டார்கள். ஆனால் பலர் கடைசி நேரத்தில் பேருந்துகளை பிடிப்பதையே வாடிக்கையாக கொண்டிருப்பவர்கள்.
 
அவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாலும், ஏராளமான பேருந்துகள் வெளிவருவதாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. வடபழனி, மதுரவாயல், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
எனவே, பெரும்பாலானோர் தங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு 1 அல்லது 2 மணி நேரம் தாமதமாகத்தான் செல்கிறார்கள். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகத்தான், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம்- சானடோரியம், பூந்தமல்லி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 
 
இருந்தாலும், அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது. இது நாளை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :