வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (14:00 IST)

கூவத்தூர் விடுதி மூடப்பட்டது ; எங்கே செல்வார்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள்?

அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 நாட்களாக தங்கியிருந்த கூவத்தூர் விடுதி தற்போது மூடப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதால், அவர் பக்கம் எம்.எல்.ஏக்கள் சென்று விடக்கூடாது என, கூவத்தூர் விடுதியில் அவர்களை சசிகலா தரப்பு அடைத்து வைத்தனர். அங்கிருந்து அவர்கள் வெளியேறவும், சுதந்திரமாக முடிவெடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் கொடுத்தனர்.
 
சசிகலாவை எதிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்-ற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர்களை கூவத்தூர் விடுதியில் சசிகலா தரப்பு அடைத்து வைத்தது, மக்களின் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டியிருந்ததால், 10 நாட்களுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து சட்டசபைக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டனர். 
 
ஆனால், சபையை நடத்த விடாமல் திமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளதால், சபை 2வது முறையாக அவையை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். ஒருவேளை, அவை மீண்டும் மற்றொரு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டால், எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூருக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில், பராமரிப்பு காரணமாக தொடர்ந்து 3 நாட்கள், எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த கோல்டன் பே ரிசார்ட் மூடப்பட்டுள்ளதாக அந்த விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான நோட்டீசும் விடுதி வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்களை மீண்டும் அங்கு தங்க வைக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே, அந்த விடுதி நிறுவனம் இந்த முடிவெடுத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது...