திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:50 IST)

திமுகவில் இன்னொரு வாரிசு.. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கே.என்.நேரு மகன்..!

திமுகவில் ஏற்கனவே ஒரு சில வாரிசுகள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ள நிலையில் தற்போது கே என் நேருவின் மகனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் பொன்முடி மகன் ஆகியோர் எம்பிகளாக இருக்கும் நிலையில் தற்போது கே என் நேருவின் மகன்  அருண் நேருவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது.

அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  திருச்சி மாவட்டத்தில் கே என் நேரு  வலுவாக இருக்கும் நிலையில் பெரம்பலூர் தொகுதியில் மிக எளிதாக அவர் வெற்றி பெற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து மேலும் சில திமுக பிரபலங்களின் வாரிசுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Mahendran