வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (15:16 IST)

கச்சத்தீவுக்காக காசு வாங்கினர் கருணாநிதி. சுவாமியின் பகீர் குற்றச்சாட்டு

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற குரல் மீனவர்களிடம் இருந்து மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒருமித்த குரலில் ஒலித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டபோது இந்த கோரிக்கை மேலும் தீவிரமாக ஏற்பட்டு வருகிறது.


 


இந்நிலையில்  கச்சத்தீவை இலங்கைக்கு, தாரை வார்ப்பதற்காக, திமுக தலைவர் கருணாநிதிக்கு, மறைந்த பிரதமர் இந்திராகாந்தியிடம் இருந்து  பணம் பெற்றதாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றை பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி கச்சத்தீவை தாரை வார்ப்பதற்காக, கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார் என்றும் என்றும் இதுகுறித்து விசாராணை செய்ய வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம்செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.