வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (09:54 IST)

ஒன்னாம்கிளாஸ் வாத்தியாருக்கு BE யை விட சம்பளம் அதிகம்: டிவீட் போட்டு சிக்கலில் சிக்கிய கஸ்தூரி

ஜாட்கோ ஜியோ குறித்து டிவீட் போட்ட கஸ்தூரிக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி சமீப காலமாக சமூக நிகழ்வுகளைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் சமூக வலைதளத்தில் தைரியமாக கருத்து பதிவிட்டு வருகிறார்.
 
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை.
 
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒண்ணாம்கிளாஸ்  வாத்தியாருக்கு Tidel  Park இல்  வேலை செய்யும் BE யை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்? என கேட்டுள்ளார். மேலும் சில டிவீட்டுகளை போட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த டிவீட்டிற்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.