1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (18:23 IST)

கரூரில் சட்டவிரோதமான கார்பன் தொழிற்சாலை: முற்றுகையிட்ட பொதுமக்கள் (வீடியோ)

கரூர் அருகே தேங்காய் ஒடுகளில் இருந்து கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், தங்களின் குடும்ப அட்டைகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் ஒப்படைக்க முடிவு செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.


 

 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, தென்னிலை கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட ராக்கிகவுண்டன் புதூர் பகுதியில் சட்டவிரோதமாக தேங்காய் ஓடுகள் என்றழைக்கப்படும், கொட்டாங்குச்சியிலிருந்து கார்பன் எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. 
 
இதையடுத்து இப்பகுதியில் இந்த தேங்காய் கொட்டாங்குச்சிகளை எரிக்கும் போது அருகில் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, காசநோய், மூச்சுத்திணறல் மற்றும் கால்நடைகளுக்கு புகையினாலும், சாம்பலாலும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. 
 
இதனால் பொதுமக்கள், பல முறை அரசு அதிகாரிகளுக்கு காவல்துறைக்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் இன்று அந்த தேங்காய் ஒடுகளான கொட்டாங்குச்சிகளிலிருந்து கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட்டு 200 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
மேலும் தகவல் அறிந்த வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இன்றுடன் காலி செய்வதாக அரசிடம் கூறியும் இன்றும் காலி செய்யாமல் தொடர்ந்து நடத்துவதால் இப்பகுதி பெண்கள் தட்டிக்கேட்டால் பெண்களை கையை பிடித்து இழுப்பதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாலும், அதுவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை முன்னிலையிலேயே இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
 
மேலும், இந்த விஷயத்தில் ஜனநாயகத்தை அரசு நம்பாமல், வெறும் பணநாயகத்தை நம்பியுள்ளதாகவும், இந்த செயலை கண்டித்து குடும்ப அட்டைகளையும், ரேஷன் கார்டுகளையும் ஒப்படைக்க உள்ளதாகவும்  கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 
மேலும் பழங்குடியினராகவும் நாங்கள் வேறு இடத்திற்கு குடி பெயர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்