1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (14:10 IST)

மணல் லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் : கரூர் அருகே பரபரப்பு

மணல் லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் : கரூர் அருகே பரபரப்பு

கரூர் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், கவுண்டன்புதூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், அடிக்கடி மணல் லாரிகளால் விபத்து ஏற்படுவதை கண்டித்தும் திடீரென்று கிராம மக்கள் மணல் லாரிகளை சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
மேலும் இரவு நேரங்களிலும் மணல் லாரிகள் அந்த பகுதிக்கு சென்று வருவதால் அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், அதிக பாரங்களை அப்பகுதியின் வழியே செல்லும் மணல் லாரிகளில் ஏற்றி செல்வதால் தார்சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக செல்வதினால் அவ்வப்போது அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஒட்டிகள் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக கூறி சுமார் 100க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


 

 
மேலும் இந்த சம்பவத்தால் வாங்கல் டூ நெரூர் பாதையில் சுமார் 2.30 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த வாங்கல் போலீஸார் பின்னர் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைகளை சரிசெய்து தருவதாக வருவாய்துறையினரிடம் பேசிய பின்னர் மணல் லாரிகள் கலைந்து சென்றது. இந்த திடீர் ஆர்பாட்டத்தினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.