1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. karunanithi health goen down

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு? - மருத்துவமனையில் கசிந்த தகவல்

Karunanithi
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
கடந்த ஒரு வாரகாலமாக கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயோதிகம், நுரையீரல் தொற்று, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக தொற்று, இரத்தத்தில் தொற்று என பல நோய்களால் அவர் அவதிப்பட்டு வருகிறார். எனினும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது.
 
இந்நிலையில், இன்று காலை ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலனோர் மருத்துவமனைக்கு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.
 
இதனால், திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.