வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (15:15 IST)

கருணாநிதியின் நண்பர் வீட்டில் நகை திருட்டு

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் மரணத்தை எட்டும் வரையில் அவரது உற்ற தோழராக இருந்தவர் தற்போதைய திமுகவின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன் ஆவார்.
சமீபகாலமாக அவரது உடல்நிலை சரியில்லாத்தால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில்  கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் உள்ள பேராசிரியர் இல்லத்தில் நகை திருட்டு போனது. இதனையடுத்து அன்பழகனின்  உதவியாளர் நடராஜ் என்பவர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸார் அன்பழகன் வீட்டில் வேலை செய்து வந்த நளினி என்பவரை விசாரித்தனர். அவர் தான் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். 
 
இதனையடுத்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.