வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2015 (14:03 IST)

ஜெயலலிதாவின் தீர்ப்பை சுட்டிக் காட்டும் விதமாக ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் - கருணாநிதி

நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு உருப்படாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் வெளிப்படையான கருத்து அன்மையில் வெளிவந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீர்ப்பிற்கு சுட்டுக்காட்டும் விதமாக கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பதாக அரசியில் வட்டரங்கள் தெரிவிக்கிறது.



உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் நினைவு தபால்தலை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நிறைந்திருந்த சபையில் ரஜினிகாந்த் பேசும்போது, "நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு உருப்படாது" என்று பேசியுள்ளார். 
 
இதுகுறித்துஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் தெரிவித்துருப்பது.
 
கேள்வி - நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது’’ என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறாரே ?

பதில் – அவருடைய இந்தப் பேச்சு ஆழமான அர்த்தச்செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சாக கூறியிருக்கிறார்.
 
அண்மைக் காலத்தில் நீதிமன்றங்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் பரவலாக எதிர்மறை கருத்துக்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் வரத் தொடங்கிவிட்டன. செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வளர்ந்து வருகிறது; இதற்கான சான்றுகளும் வளர்ந்து வருகின்றன.
 
உச்சநீதிமன்றம் பல்வேறு பிரச்சினைகளில் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளை, காலத்திற்கேற்பவும் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்பவும் மாற்றியமைத்து கொள்ளலாம்; என்பன போன்ற கருத்து சிதைவுகள் வேகமாகப் பரவி வரும் இந்நாளில், ‘‘சூப்பர் ஸ்டார்’’ ரஜினிகாந்த், வெளிப்படையாக மனம் திறந்து சொல்லி இருக்கும் இந்தக் கருத்து, ஜனநாயகத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கதே ஆகும்.