வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Velu
Last Updated : செவ்வாய், 3 மே 2016 (04:12 IST)

மு.க.அழகிரி வீட்டில் கருணாநிதிக்கு ஸ்பெஷல் விருந்து?

மு.க.அழகிரி வீட்டில் கருணாநிதிக்கு ஸ்பெஷல் விருந்து?

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டில் இருந்து கருணாநிதிக்கு ஸ்பெஷல் விருந்து அளிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மதுரையில் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
 
இந்த நிலையில், மதுரையில் இரவு தங்கும் கருணநிதிக்கு அவரது மகனும், திமுக முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி வீட்டில் இருந்து ஸ்பெஷல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்