வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (09:53 IST)

மு.க.ஸ்டாலினுக்கு பின்னாடி தான் கருணாநிதி இருக்கனும்

தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு அமர்வதற்கு வசதியான இருக்கை ஒதுக்கப்படவில்லை என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கை அவர் இருக்க வசதியாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.


 
 
கடந்த 5 ஆண்டுகளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டபையில் அமர்வதற்கு வசதியாக இருக்கை ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது ஆனால் அதிமுக அரசு கண்டுக்கவே இல்லை.
 
இதனையடுத்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது அதிமுக அரசு. இந்நிலையில் சட்டசபை உறுப்பினர்கள் பதவியேற்புக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி முதல் வரிசையில் உள்ள எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அமரும் இடத்தில் அமர்ந்து பதவியேற்றுக் கொண்டார். பின்னர் சபாநாயகர் தனபலிடம் சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கைவிடப்பட்டது.
 
திமுக தரப்பு கோரிக்கையில் கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்வதற்கு வசதியாக பதவியேற்பு நாள் அன்று அவர் அமர்ந்த அதே இடத்தை ஒதுக்கவேண்டும் என கோரப்பட்டது. பதவியேற்பு நாள் அன்று கருணாநிதி அமர்ந்திருந்தது எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட இடம்.
 
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்காமல் இரண்டாம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு பின்புறம் தான் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
தற்போது கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் இரண்டாம் வரிசையில் உள்ள முதல் இருக்கை. இதில் அவர் வசதியாக சக்கர நாற்காலியில் வந்து அமர வசதி செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.