1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (22:40 IST)

கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்தி: தெளிவாக்கிய ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கடந்த சில மணி நேரங்களாக வதந்தி பரவி வருவதால் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த வதந்தியை பொய் என்று நிரூபணம் செய்துள்ளார்.



 
 
இன்று மாலை டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்ட ஒரு அறிக்கையால் தமிழகமே பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அதற்கு ஒருசில மணி நேரம் கழித்து திடீரென திமுக தலைவர் கருணாநிதி குறித்து மிக வேகமாக ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வதந்தியை பொய்யாக்கும் வகையில் திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் உடனடியாக கருணாநிதியை நேரில் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். உடன் திமுக செயலாளர் அன்பழகன் மற்றும் திக தலைவர் வீரமணி ஆகியோர் இருந்தனர்
 
கருணாநிதியுடன் ஸ்டாலின் உள்ள புகைப்படம் வெளிவந்த பின்னர் இந்த வதந்தி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது இதேபோல் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் உடனே அதிமுகவினர் வெளியிட்டு மக்களின் சந்தேகத்தை தீர்த்து இருக்கலாம் என டுவிட்டர் பயனாளிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.