திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 4 மே 2016 (10:54 IST)

கருணாநிதி சோனியா காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம்

மே 16-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் சோனியா திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிர்சச்சாரம் செய்கிறார்.


 
 
சென்னை தீவுத்திடலில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
 
சோனியாவும், கருணாநிதியும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவிருப்பதால் பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் தீவுத்திடல் பகுதியை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவதால் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், டெல்லியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புப் படையின் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.சர்மா தலைமையிலான குழுவினர் சென்னை வந்தனர்.
 
இந்நிலையில் இயக்குநர் கௌதமன் தலைமையில் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினர் சோனியா காந்தி வருகையை கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.