ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 டிசம்பர் 2018 (19:59 IST)

மேகதாது அணை உறுதி: தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை மதிக்காத கர்நாடகா

கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதில் இருந்தே இரு மாநிலங்களுக்கும் இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் காவிரியில் கர்நாடகா மாநிலம் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் முன்மொழியிடப்பட்டது

ஆனால் இந்த தீர்மானத்திற்கு கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கர்நாடகா அறிவித்துள்ளதால் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சனையை நடுநிலையுடன் கையாள வேண்டிய மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாகவே நடந்து கொள்வதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. வரும் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறவே மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.