கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

Annakannan| Last Modified செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (15:39 IST)
கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த எஸ்.நாகராஜன், மின்னணு நிர்வாகப் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக, சஜ்ஜன் சிங் ஆர் சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கே.பாஸ்கரன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக உள்ள வி.கே.சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள பட்டு வளர்ச்சிப் பிரிவு இயக்குநர் எஸ்.பிரபாரன், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவின் ஆணையரான பி.செந்தில்குமார், சேலத்தில் உள்ள பட்டு வளர்ச்சிப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :