ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (18:07 IST)

கமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்றேன்: நயன்தாரா பட இயக்குனர்

kamal
கமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்றேன் என நயன்தாரா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கோல்டு. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சினிமாவின் எவரெஸ்ட் சிகரமான உலக நாயகன் கமல்ஹாசனை முதல்முறையாக சந்தித்தேன். அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன், அவரது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நான் ஒரு மாணவனாக அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டேன், என தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran