காவல்துறையினர்களுக்கு விடுமுறை: தமிழக அரசின் நடவடிக்கைக்கு கமல் பாராட்டு!

kamal
தமிழக அரசின் நடவடிக்கைக்கு கமல் பாராட்டு!
siva| Last Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:33 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக காவல்துறையினர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்றும் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டார் என்ற தகவலும் வெளிவந்தது என்பதை பார்த்தோம்


இந்த நிலையில் காவல்துறையினருக்கு சுழற்சி அடிப்படையில் விடுமுறை என்ற தமிழக அரசின் நடவடிக்கைக்கு கமலஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

காவல்துறையினருக்கு
மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு
சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :