1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்...!

ஒரு திரி ஏற்றும்போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலங்களை அடையலாம். புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் நீங்கும்.

பலன்கள்:
 
* பஞ்சு திரி - மங்களம் பெருகும்.
 
* வாழை தண்டு திரி - புத்திர பாக்கியம்.
 
* பட்டு நூல் திரி - எல்லாவித சுபங்களும்.
 
* ஆமணக்கு எண்ணெய் தீபம் - அனைத்து செல்வம்.
 
* தேங்காய் எண்ணெய் இலுப்பண்ணெய் தீபம் - தேக ஆரோக்கியம், செல்வம்.
 
* நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அகலும்.
 
* தாமரை நூல் தீபம் - லக்ஷ்மி கடாக்ஷம்.
 
* நெய் தீபம் - சகல சௌபாக்யம்.
 
* வெண்கல விளக்கு - பாவம் அகலும்.
 
* அகல் விளக்கு - சக்தி பெருகும்.
 
தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதகூடாது. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லக்ஷ்மி என்று மூன்று முறையும், தீப துர்கா என்று மூன்று முறையும், குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதினால்  வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.