திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 மே 2020 (06:53 IST)

ஒரே ஒரு டுவிட்டில் கேன்சர் நோயாளிகளுக்கு உதவி செய்த கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் மத்திய மாநில அரசுகளை பால்கனி அரசுகள் என்று விமர்சனம் செய்தாலும், அரசிடம் இருந்து நல்ல அறிவிப்புகள் வரும்போது பாராட்டவும் தவறுவதில்லை. அதேபோல் சமூக ஆர்வலர்கள் செய்யும் சமூக சேவைகளையும் அவர் அவ்வப்போது பாராட்டி வருகிறார் 
 
இந்த நிலையில் சங்கல்ப் என்ற அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை தந்து கொண்டிருக்கிறது. இது குறித்து கமலஹாசன் தன்னுடைய டுவிட்டரில் 'கொரோனா தொற்று சமயத்தில், சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் கேன்சர் நோயாளிகளுக்கு, இலவச மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் சங்கல்ப் என்ற அமைப்புக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டிய முயற்சி. பிறர்க்கு உதவுபவர்க்கு உதவுவோம்’ என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக சங்கல்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சென்னையில் கொரோனா தொற்று காரணமாக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் புற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவச மளிகை பொருட்களை எங்கள் நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கிறது. 7825888000 என்ற எண்ணில் அழைத்தால் மளிகை பொருட்கள் வீட்டுக்கே டெலிவரி செய்து தரப்படும் என்று அறிவித்திருந்தது 
இந்த பதிவு அனைவரிடமும் போய் சேரவேண்டும் என்பதற்காக கமலஹாசன் பதிவு செய்துள்ள இந்த டுவிட்டால் பல கேன்சர் நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது