1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2023 (14:56 IST)

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய கமல்

kamalhasan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள்  நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள்,  ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தமிழ் நாட்டு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தன் வலைதள பக்கத்தில்,   கலையுலக சாதனைகள் பல படைக்கும் கலைஞானி  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றில் இருந்து குடிநீர்  உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கினார் கமல்ஹாசன். 

அவருடன்  தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.