திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (10:04 IST)

சென்னை வேளச்சேரி தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இருப்பினும் முதல் நபராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் தற்போது பிரச்சாரம் செய்து வரும் கமல்ஹாசனுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிட வில்லை. ஆனால் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் போட்டியிடும் தொகுதி எது என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று கமல்ஹாசன் பிரச்சாரத்தின் இடையே கூறியிருந்தார்
 
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் தான் போட்டியிடுவார் என்றும் குறிப்பாக வேளச்சேரி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேளச்சேரி பகுதியில் உள்ள கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்
 
கமல் எங்கள் தொகுதியில் போட்டியிட்டால் அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்