வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:15 IST)

அடுத்த விக்கெட் காலி: கலையும் சீமான் தம்பிகள் கூடாரம்??

நான் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கல்யாண சுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியில் மாநில நிர்வாகி பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சீமான் சமீபத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார், 
 
இந்நிலையில் நான் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கல்யாண சுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு... 
 
சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பணியாற்றியுள்ளேன். என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது கல்யாணசுந்தரம் தனது விலகலை அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.