1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (18:30 IST)

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சியில் சக விஞ்ஞானிகள்

suicide
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதையடுத்து சக விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் 
 
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் யுவராஜ் என்ற 51 வயது விஞ்ஞானி பணிபுரிந்து வந்தார் என்பதும் அவர் அணுமின்நிலைய குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று யுவராஜ் தனது மகனுக்கு மதிய உணவு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இதுகுறித்து போலீசார் முதற்கட்ட விசாரணை செய்தபோது குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விஞ்ஞானி யுவராஜ் தற்கொலை சக விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது