1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (14:56 IST)

ஜவடேகரின் மௌனம், சம்மதம்... கடம்பூரார் சூசகம்!!

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு.
 
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் பாஜவின் வெற்றி அதிகரித்துள்ளது. எல்லா இடங்களிலும் காங்கிரஸுக்கு சரிவுதான். தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம். மேலும், தமிழக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். 
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவிடன் கேட்ட போது. முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மௌனம், சம்மதம் என்று தான் அர்த்தம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.